துப்பாக்கியால் சுடுவது மட்டும் தாக்குதல் அல்ல; கவாஜா ஆசீப் pakistan defence minister threatens india
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்கு உடனடி பதிலடியாக, பாகிஸ்தான் உடனான உறவை முறிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அதில் முக்கியமானது சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது. சிந்து நதிநீரை நிறுத்துவதால் மின்சாரம், உணவு உற்பத்தி பெருமளவு, பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது. சிந்து நதிநீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி, ஆறுகளின் தண்ணீரை தேக்கவோ, திசை திருப்பவோ அணை உள்ளிட்ட கட்டுமானங்களை இந்தியா கட்டினால் அது பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்றுதான் கருதப்படும். சிந்து நதிநீரை தடுக்க இந்தியா கட்டுமானங்களை கட்டினால் அதை எங்கள் ராணுவம் தகர்க்கும். சிந்து நதிநீர் ஒப்பந்த்தை மீறுவது எளிதானதல்ல; அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாக இருக்கும். பீரங்கிகள் துப்பாக்கியால் சுடுவது மட்டும் தாக்குதல் அல்ல. பல வகையில் தாக்குதல் நடத்தலாம்; நதிநீர் ஒப்பந்ததை மீறுவதும் அதில் ஒன்று. இதன் காரணமாக மக்கள் பசியாலும் தாகத்தாலும் மடிந்து போவார்கள் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப் கூறியுள்ளார்.