ஒரே நேரத்தில் மாவொளி வீசி மெய்சிலிர்க்க வைத்த தருணம் | Panai kanavu thiruvizha | Palm climbers prot
நுங்கு முதல் பனங்கிழங்கு வரை 80க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை கொடுக்கும் பனை மரங்கள் ஒரு காலத்தில் 50 கோடி அளவில் இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை வெறும் 5 கோடியாக சுருங்கிவிட்டது. அதே போலத்தான் பனை தொழிலை நம்பி மட்டுமே 10 லட்சம் பேர் வாழ்ந்த நிலையில், இப்போது 10 ஆயிரம் பேர்களாக குறைந்து விட்டனர். அவர்களும் இப்போது தினக்கூலி தொழிலாளர்களாக அன்றாடம் காய்ச்சிகளாக மாறி வருகின்றனர். காரணம் பனையை நம்பி வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். உண்மையில் பனை என்பது கற்பகத்தருவை. கேட்டதெல்லாம் தரும். பல தலைமுறைகளை வாழவைக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த பனையை காக்கவும், பனைப்பொருட்களை பிரபலப்படுத்தவும், பனைத் தொழிலாளர்கள் வாழ்வை மீட்கவும் கடந்த 3 ஆண்டுகளாக புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி வட்டத்தில் உள்ளது வேம்பி மதுரா, பூரிகுடிசை கிராமம். இந்த கிராம மக்கள் பனங்காடு என்ற பனை மரங்கள் சூழ்ந்த இடத்தில் 4வது ஆண்டாக பனை கனவு திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பனைக்கனவு திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்.