உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 100 வயதிலும் சாதித்து காட்டிய பாப்பம்மாள் காலமானார் | Pappammal passed away | Padma shri awardee

100 வயதிலும் சாதித்து காட்டிய பாப்பம்மாள் காலமானார் | Pappammal passed away | Padma shri awardee

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசித்து வந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 110. விவசாயத்தின் மீது தீராத மோகம் கொண்ட பாப்பம்மாள், தள்ளாத வயதிலும் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வந்தார். பலருக்கும் இயற்கை விவசாயத்தில் முன்னுதாரணமாக இருந்தார். இயற்கை விவசாயத்தில் இவரது பங்களிப்பை பாராட்டி தான் 2021ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அதே ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்தபோது பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார். கடந்த ஆண்டு மார்ச்சில் டில்லியில் நடந்த சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டில் பாப்பம்மாள் பாட்டியும் கலந்து கொண்டார். அப்போது தனக்கு சால்வை அணிவித்த பாப்பம்மாள் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் பெற்றார். இதன்மூலம் பாப்பம்மாள் நாடு முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் தமிழக அரசும் பாப்பம்மாளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அனைத்து தேர்தலிலும் தவறாமல் ஓட்டளித்து வந்த இவர், தள்ளாத வயதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட ஓட்டளித்தார். வயது மூப்பின் காரணமாக பாப்பம்மாள் உடல் நலம் பாதித்து படுத்த படுக்கையாக இருந்த நிலையில் மரணம் அடைந்தார். மூதாட்டியின் உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாப்பம்மாள் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை