தரமில்லாத பதக்கங்களை மாற்றித்தர சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆண்டு 33 வது ஒலிம்பிக் போட்டி, நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 117 பேர் பங்கேற்றனர். இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் கிடைத்தன. பதக்கம் வாங்கிய 4 மாதங்களில் அவை நிறம் மாறி, துருபிடித்து விட்டதாகவும், தரமற்ற பதக்கங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்தார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்தும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜன 15, 2025