/ தினமலர் டிவி
/ பொது
/ எதிர்கட்சி அமளிக்கிடையே 26 மசோதாக்கள் நிறைவேற்றம் Parliament Adjourned Monsoon session ended
எதிர்கட்சி அமளிக்கிடையே 26 மசோதாக்கள் நிறைவேற்றம் Parliament Adjourned Monsoon session ended
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21ல் துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளே ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் முடங்கின. ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி, பதவியை ராஜினாமா செய்தார். அதை ஜனாதிபதி ஏற்றதை அடுத்து, துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சபையை தொடர்ந்து வழி நடத்தினார்.
ஆக 21, 2025