உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாழ்வே போராட்டம் ஆகிவிட்டதே காரணம்; ஆசிரியர்கள் வேதனை Part time Teachers Protest| Teachers Demand|

வாழ்வே போராட்டம் ஆகிவிட்டதே காரணம்; ஆசிரியர்கள் வேதனை Part time Teachers Protest| Teachers Demand|

பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். பெரம்பலூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு வந்தார். நேற்றைய போராட்டத்தின்போது, கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது, ஆசிரியர் கண்ணன் கழிவறைக்கு சென்று வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அவரை மீட்ட சக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், அங்கு அவர் மரணம் அடைந்தார். பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்த கோரிக்கையை திமுகஅரசு ஏற்காததால் சில தினங்களாகவே ஆசிரியர் கண்ணன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. தொடர் போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவு எடுத்து இருக்கிறார். #teachersprotest #DPI #chennai #parttimeteachers #teachersprotest #chennai #chennaieducation #chennainenews #teacherstrike #teacherdemands

ஜன 14, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D. A. Joseph
ஜன 15, 2026 04:19

1. பகுதி நேர ஆசிரியர்களின் கல்வி தகுதி 2. ஒன்றிய அரசு விதிகளின் படி TET தேர்ச்சி உள்ளதா 3 . வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா 4 . எந்த மாதிரியான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டனர்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை