பழவேற்காடு டு காட்டுப்பள்ளி இனி எளிதாக கடக்கலாம் | Pazhaverkadu | Thiruvallur | Adani Enterprise
திருவள்ளூர் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் வழியில் கருங்காலி பள்ளம்பாடு என்ற இடத்தில் ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டரை கிலோ மீட்டர் பிரதான சாலை முழுதும் மணல் திட்டுகளாக மாறி இப்பகுதியை கடப்போர் அவதி அடைந்து வந்தனர். மழைக்காலங்களில் பைக் சக்கரங்கள் மண்ணில் புதைந்து 40 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலம் நேர்ந்தது. கலெக்டர், எம்எல்ஏ என பலதரப்பினரிடம் கோரிக்கை வைத்தும் தீர்வு எட்டவில்லை. இந்த மார்க்கமாகத்தான் அதானி துறைமுகம் எல்என்டி கப்பல் கட்டும் தளம், வட சென்னை அனல் மின் நிலையம் என பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு மக்கள் வேலைக்கு சென்று வந்தனர். இந்த சூழலில் அதானி துறைமுகத்திலும் சாலையை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று சாலையை சீர் செய்ய அதானி துறைமுக அதிகாரிகள் முன் வந்தனர். அதானி துறைமுக சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சாலை பணிகள் துவங்கப்பட்டுள்ளது.