கைதான ஆசிரியருக்கு களமிறங்கி போராடும் மாணவிகள்: பெரம்பலூரில் பதற்றம் perambalur government school
பெரம்பலூரை அடுத்த அருமடல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (41) 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் விமல்ராஜ் வந்த பிறகு பிள்ளைகள் ஆங்கிலத்தில் நன்றாக படிப்பதாக பெற்றோர்கள் கூறுகி்னறனர். இந்நிலையில் இதே பள்ளியில் கணினி பயிற்றுநராக பணியாற்றும் பெண்ணுக்கு ஆசிரியர் விமல்ராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரச்னை கிளம்பியுள்ளது. இது தொடர்பாக, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணினி பயிற்றுநர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் விமல்ராஜை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால், ஆசிரியர் விமல்ராஜ் நல்லவர்; கணினி பயிற்றுநர் பொய்புகார் கொடுத்து போலீசில் மாட்ட வைத்துவிட்டார்; விமல்ராஜை விடுதலை செய்ய வேண்டும்: பொய் புகார் கொடுத்த பெண் கணினி பயிற்றுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் செல்வகுமார், டிஎஸ்பி ஆரோக்கியராஜ் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பிரச்னைகுறித்து விசாரிப்பதாக உறுதி கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர்தான் பொய் புகார் கொடுக்க தூண்டி விட்டதாக, ஆசிரியரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். பைட் ஆசிரியரின் மனைவி ரஜினிகாந்த் பெரம்பலூர் முதன்மை கல்விஅலுவலர் செல்வகுமார் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பெரம்பலூர் கலெக்டருக்கு அறிக்கைஅனுப்பப்படும். அதை தொடர்ந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் கூறினார். ஆனால், அரசு பள்ளிகளிலும் ஜாதி அரசியல் புகுந்து விட்டது; அதன் வெளிப்பாடுதான் இந்த பள்ளியில் நடந்த சம்பவம்.. இதனால் பிள்ளைகளின் படிப்பு பாழாகிறது எனவும் சில பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.