25 ரூபாய் திருப்பி தராததால் வந்தது பெருத்த நஷ்டம்
விழுப்புரம், வழுதரெட்டி முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2022 நவம்பரில், உறவினரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் 25 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்தார். விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டல் நடத்தும் பாலமுருகனிடம் விசாரித்தார். பார்சல் சாப்பாடு 80 ரூபாய். சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், 1 ரூபாய் ஊறுகாய் பெட்டலம், வாழை இலை எல்லாம் தந்துவிடுவோம் என்றார். 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து 25 சாப்பாடுகளை வாங்கினார் ஆரோக்கியசாமி. பில் கேட்டும் ஓட்டல் உரிமையாளர் தரவில்லை. பார்சல் சாப்பாடுகளை கொண்டுபோய் ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கினார். பார்சலில் எல்லா ஐட்டமும் இருந்தது. ஆனால் ஊறுகாய் மட்டும் இல்லை. ஓட்டல் ஓனர் பலமுருகனிடம் கூறினார். 25 ஊறுகாய்க்கு 25 ரூபாயை திருப்பி தரும்படி கேட்டார் ஆரோக்கியசாமி. அதெல்லாம் தர முடியாது என கறாராக சொல்லிவிட்டார் பாலமுருகன். ஏற்கனவே பில்லும் தரவில்லை. இப்போ உறுகாய் காசும் தராததால் அதிருப்தி அடைந்த ஆரோக்கியசாமி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டார்.