உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நல்ல ரோடு போட்டதால் கேதார்நாத்தில் குவியும் பக்தர்கள்

நல்ல ரோடு போட்டதால் கேதார்நாத்தில் குவியும் பக்தர்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் சார்தாம் யாத்திரையின் ஓர் அங்கமாக உள்ளன. இந்த கோயில்களுடன் கங்கோத்ரி, யமுனோத்ரியை தரிசிப்பதே சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் பக்தர்கள் இங்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சிலர் சிவன் கோயிலான கேதார்நாத் அல்லது விஷ்ணு காேயிலான பத்ரிநாத்துக்கு மட்டும் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பத்ரிநாத் கோயில் சாலையை ஒட்டி சிரமமற்ற இடத்தில் அமைந்துள்ளது. கேதார்நாத் கோயிலுக்கு செல்ல 16 கிமீ, மலைப்பாங்கான இடங்களை கடந்து செல்ல வேண்டும். அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் என்பதால், கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையை விட, பத்ரிநாத்துக்கு செல்வார் பக்தர்கள் எண்ணிக்கை எப்போதும் அதிகம் இருக்கும். இந்நிலையில், 2013ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட பெருமழை, பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும் உத்தராகண்ட் அரசு சேதமடைந்த உள்கட்டமைப்புகளை துரித கதியில் சீர் செய்ததுடன், அவற்றை மேம்படுத்தியது. இதனால், சுற்றுலாதுறை மீண்டும் புத்துயிர் பெற்றது. 1990ல் பத்ரிநாத் கோயிலுக்கு 3.62 லட்சம் பேர் சென்ற நிலையில், கேதார்நாத்துக்கு 1.17 லட்சம் பேர் மட்டுமே சென்றனர். 2022ம் ஆண்டு வரை இந்த போக்கு தொடர்ந்தது. அதாவது கேதார்நாத்தை விட பத்ரிநாத்துக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையே தொடர்ந்து அதிகம் இருந்து வந்தது. 2023ல் இந்த நிலை மாறியது. பத்ரிநாத்துக்கு 18.3 லட்சம் பேர் சென்ற நிலையில், கேதார்நாத்துக்கு 19.6 லட்சம் பேர் சென்றதாக அரசின் குறிப்பில் செய்தி வெளியானது.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி