ஆந்திராவுக்கு கிடைக்கும் சிறப்பு முன்னுரிமை: மோடி உறுதி | PM Modi | Narendra Modi | Andhra Pradesh
ஆந்திராவில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து, ஆந்திரா பல்கலை மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டார். திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடியை, சாலைகளின் இருபுறங்களில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். தொண்டர்கள் பூக்களை வீசி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.