/ தினமலர் டிவி
/ பொது
/ முழு வீச்சில் ரெடியாகும் பாம்பன்: வெளியான அறிவிப்பு | PM Modi | Pamban Bridge | Pamban New Bridge
முழு வீச்சில் ரெடியாகும் பாம்பன்: வெளியான அறிவிப்பு | PM Modi | Pamban Bridge | Pamban New Bridge
பாம்பன் கடலில் 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் ஜனவரி 31ல் ரயில் இயக்கி ஒத்திகை சரி பார்க்கப்பட்டது. ஒத்திகையின் போது, துாக்கு பாலங்களை மூடியதும் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட சென்னை போர்ட் மெயில் ரயில் 22 காலிப்பெட்டிகளுடன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது. இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா இந்த மாத இறுதியில் நடக்கும் என்றும், பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் பாலம் திறப்பு விழா நடக்கவுள்ள இடத்தை ஆர்.என்.சிங் பார்வையிட்டார்.
பிப் 14, 2025