4 ரயில் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு pm modi| operation sindoor| make in india|
கர்நாடகாவின் பெங்களூருவில் பிரதமர் மோடி, 3 வந்தே பாரத் ரயில்கள் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்- வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர்-புனே ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். இது தவிர, பெங்களூரு மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் மோடி தொடங்கி வைத்தார். பேஸ்-2 திட்டத்தின் ஒரு பகுதியான ராகிகுட்டா- எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான 19 கிலோ மீட்டர் மஞ்சள் வழித்தடத்தில் இந்த மெட்ரோ ரயில் ஓடுகிறது. பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் ரயிலுக்குள் சென்று பார்வையிட்ட பிரதமர்மோடி, அங்கு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அதன் பின், மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் உரையாற்றியபடி சென்றனர். துவக்க விழாவில், 15,610 கோரடி மதிப்பிலான மேட்ரோ ரயில் பேஸ்3 திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவுகூர்ந்தார். ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதல் முறையாக பெங்களூரு வந்துள்ளேன். இந்த ஆபரேஷன் துணிச்சலான மற்றும் உறுதியான புதிய இந்தியாவை வெளிக்காட்டியது. எல்லைக்கு அப்பால், பயங்கரவாதிகள் மறைவிடங்களை அழித்த நமது ஆயுதப்படைகள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானையும் சில மணிநேரத்தில் மண்டியிட வைத்த ஆற்றலை உலகம் பார்த்தது. நவீன தொழில்நுட்பம் மற்றும் மேக் இன் இந்தியாவின் வலிமையால் இந்த வெற்றி சாத்தியமானது. இந்த சாதனையில் பெங்களூரு இளைஞர்களின் பங்கு முக்கியமானது எனக்கூறினார். புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகளாவிய ஐடி துறையில் இந்தியாவுக்கும் சிறந்த இடத்தை இந்த நகரம் பெற்று தந்துள்ளது. அதற்கு காரணம், இங்குள்ள மக்களின் கடுமையான உழைப்பும், திறமையும்தான் என்றார். உலகின் 3வது பெரிய பொருளாதார இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறோம். 2014க்கு முன், 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் இருந்தது. இப்போது, 24 நகரங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது. 2014க்கு முன்பு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டு இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. 2014க்கு முன்பு 74 ஏர்போர்ட்கள் இருந்தன. இப்போது 160 ஆக அதிகரித்துள்ளது. நீர்வழித்தடங்கள் கூட 3ல் இருந்து 30 ஆக அதிகரித்து உள்ளதாக பிரதமர் கூறினார். நமது அடுத்த முன்னுரிமை Tech Atmanirbhar Bharat ஆக இருக்க வேண்டும். அதாவது டெக்லாஜியில் சுயசார்பு. நாட்டின் தேவைக்கு முன்னுரிமை தந்து புதிய தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.