உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி சமையலறையில் அசிங்கம் செய்தவன் சிக்கினான் | Police | Namakkal School

பள்ளி சமையலறையில் அசிங்கம் செய்தவன் சிக்கினான் | Police | Namakkal School

ச்சீ..ச்சீ.. உவாக்... பள்ளியில் மலம் பூசியது எதுக்கு? ஷாக் தரும் குற்றவாளியின் பதில் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசு துவக்க பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள சமையல் அறையிலும், ஆசிரியர்கள் அறைக்கு முன்னாலும் அருவருப்பான படங்கள் வரையப்பட்டிருந்தது. சமையல் அறையின் பூட்டிலும், சுவரிலும் மலம் வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக தலைமை ஆசிரியை தனலட்சுமி எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய போலீசார் விசாரணை நடத்தினர். மனித மலம் வீசப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர். மது அருந்திவிட்டு போதையில் பள்ளி சுவரில் ஆபாச வார்த்தைகள் எழுதியதை அவர் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே பள்ளியின் சத்துணவு சமையலர், உதவியாளருடன் துரைமுருகனுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே சத்துணவு மைய கதவில் மலம் பூசினேன் என துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். எனக்கும் பள்ளியில் சமையல் செய்யும் கார்த்தீஸ்வரி, கமலாபதிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. அவர்களை பழிவாங்க வேண்டும் என நினைத்தேன். செப்டம்பர் 1 ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு பள்ளியின் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றேன். மலம் கழித்து அதை எடுத்து சமையலறை கதவு மற்றும் பூட்டில் பூசினேன். பள்ளி வளாகத்தில் கிடந்த கலர் பென்சிலை எடுத்து அருகில் உள்ள சுவற்றில் ஆபாசமான வார்த்தை எழுதி, படம் வரைந்தேன் என துரைமுருகன் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ