உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 22-09-2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 22-09-2025 | District News | Dinamalar

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திரா எல்லை பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக SP சியாமளாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ASP கோவிந்தராஜ் தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கொரிபள்ளம், மாத கடப்பா, தேவராஜபுரம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். சோதனையில், சுமார் 3500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 113 லிட்டர் தயாரான கள்ளச்சாராயம் மற்றும் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் சிக்கியது. இதை பறிமுதல் செய்த போலீசார் ஸ்பாட்டிலேயே அழித்தனர். இது தொடர்பாக ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர் . விசாரணை தொடர்கிறது.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை