உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!

இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர்கள் மகேந்திரன், ரவிச்சந்திரன். இருவரும் கட்டட தொழிலாளர்கள். நேற்றிரவு இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி பங்கிட்டு குடித்துள்ளனர். இதில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து இருவரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். இதற்கிடையே மகேந்திரன், ரவிச்சந்திரன் உட்பட அப்பகுதியை சேர்ந்த 7 பேர், சில தினங்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவட்டப்பு பகுதியில் இருந்து சாராயம் வாங்கி வந்து குடித்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக ஊர் மக்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்டப்பு பகுதியில் சாராயம் விற்பனை நடக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை