வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதே ரேஷன் அரிசி தான் தர போகிறார்கள். தரமான அரிசி எப்போது தருவார்கள்.
பொங்கல்பரிசு தொகுப்புக்கான பொருட்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கியது தமிழக அரசு Pongal gift for TN
#Pongal2026| PongalParisu| TNRationcard| TNGovernment| Pongalthoguppu| DMK| தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை ஒட்டி, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, 2026ம் ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்பாக, தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. 1 கிலோ பச்சரிசி 25 ரூபாய், 1 கிலோ சர்க்கரை 48 ரூபாய் 54 காசுகள், ஒரு முழு நீள கரும்பு 38 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, 2 கோடியே 22 லட்சத்து 91ஆயிரத்து 710 குடும்ப அட்டைதாரர்கள் பலன் அடைவர் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதன் படி, பரிசு தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை கொள்முதல் செய்ய, 248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்புதல் குறித்த அரசாணையை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் சத்தயபிரதா சாகு வெளியிட்டுள்ளார். இந்த ஆணை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர், நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், முதன்மை மாநில கணக்காயர், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் உட்பட முக்கிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள் பற்றி விவரங்கள் வெளியான நிலையில், பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கப்படுமா என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதே ரேஷன் அரிசி தான் தர போகிறார்கள். தரமான அரிசி எப்போது தருவார்கள்.