திரிவேணி சங்கமத்தில் உ.பி. அமைச்சரவை ஆலோசனை | Maha Kumbh mela | Yogi Adithyanat
திரிவேணி சங்கமத்தில் கோலாகலம் அமைச்சர்களுடன் புனித நீராடிய யோகி உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில், தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். 13ம் தேதி துவங்கிய பிரமாண்ட திருவிழாவில், இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வரும் 29ம் தேதி மவுனி அமாவாசை என்பதால், அன்று ஒரே நாளில் ஒரு கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜில் பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். 2 துணை முதல்வர்கள் மற்றும் அனைத்து அமைச்சர்களும் அவருடன் வந்திருந்தனர். திரிவேணி சங்கமம் அருகே அமைச்சரவை கூட்டம் நடந்தது. தற்போது நடக்கும் மகா கும்பமேளா மட்டுமின்றி, 2030- 31ம் ஆண்டு இதே பிரயாக்ராஜில் நடக்க உள்ள அர்த்த கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறினார்.