/ தினமலர் டிவி
/ பொது
/ இப்படி செய்வான்னு நினைக்கல; பெண்ணின் பெற்றோர் கதறல் pregnant wife crime hyderabad| young wife dism
இப்படி செய்வான்னு நினைக்கல; பெண்ணின் பெற்றோர் கதறல் pregnant wife crime hyderabad| young wife dism
தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டம், காமரெட்டி குடாவை சேர்ந்தவர் ஸ்வாதி. வயது 22. கல்லூரி படிக்கும்போதே, அதே பகுதியை சேர்ந்த மகேந்தர் ரெட்டியை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். மகேந்தர் ராபிடோ டூவீலர் ஓட்டி வந்தார். ஸ்வாதி 4 மாத கர்ப்பணியாக இருந்தார். கருத்தரித்தது முதல் மனைவி மீது மகேந்தர் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. ஆத்திரமடைந்த மகேந்தர், ஸ்வாதியை கொலை செய்தார். அதன்பின், தலை, கை, கால் என உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்து சென்று, முசி ஆற்றில் வீசி உள்ளார்.
ஆக 24, 2025