மேஜிக் ஷோ பார்த்து பிரமித்த குடியிருப்புவாசிகள் | dinamalar | prestige bella vista iyyappanthangal
தினமலர் நாளிதழ் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்துஆடி கார்னிவெல் -அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வை நிசான் ஆட்டோ ரிலே, மயில் பிராண்ட் ஹோம் கேர் ப்ராடக்ட்ஸ், ‛கிட்டீ பட்டீ, சிம்ஸ் மருத்துவமனை, தனிஷ்க் ஜுவல்லரி ஆகியோர் உடன் வழங்குகின்றனர். அந்த வகையில் அய்யப்பன்தாங்கல், மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ‛பிரெஸ்டீஜ் பெல்லா விஸ்டா அடுக்குமாடி குடியிருப்பில் காலை முதல் இரவு வரை, ஆடி கார்னிவெல் -அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 400க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்றதால், குடியிருப்பே விழாக்கோலம் பூண்டது. காலையில் பெண்களுக்கான சமையல் போட்டியும், கோலப் போட்டியும் நடந்தன. ஆண்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மாலையில் டாய் ரயில், ஜம்பிங் பலுான், வாட்டர் மார்க் பெயின்ட் மற்றும் கேலி சித்திரம், மேஜிக் ஷோ, ஆடல், பாடல், ஆர்ட் மற்றும் கிராப்ட் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடந்தன.