தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: நடந்தது என்ன? | Producers Outrage
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய தலைவராக, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி உள்ளார். தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர், துணை தலைவர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசவும், படம் தொடர்பான சிக்கல்கள், நடிகர்களின் சம்பளம் மற்றும் படத்தயாரிப்பு செலவு, வினியோகத்தில் உள்ள பிரச்னைகளை சுமுகமாக தீர்க்கவே, தயாரிப்பாளர் சங்கம், 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை இந்த சங்கம் சந்தித்த தேர்தல்களில், அரசியல் தலையீடுக்கு இடமே இல்லாமல் இருந்து வந்தது. அதை தொடரும் வகையில், தற்போதும் எல்லாரும் கூடி பேசி, போட்டியின்றி தலைவரை தேர்வு செய்ய, சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அப்படியே போட்டி ஏற்பட்டாலும், அதை நேர்மையாக நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதற்கு எதிராக, ஆளும் கட்சியை சேர்ந்த தயாரிப்பு நிறுவன முக்கிய நிர்வாகி செயல்பட்டு வருகிறார். #TamilFilmProducers #RulingPartyInterference #CouncilElections #TamilCinema #DMKPressure #FilmIndustryPolitics #ProducersCouncil #TamilNaduFilms #ElectionTampering #ChennaiCinema