உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவசாய தலைவர், ஊராட்சி மாஜி தலைவருக்கு சிறை தண்டனை PRpandian| Farmers Protest|

விவசாய தலைவர், ஊராட்சி மாஜி தலைவருக்கு சிறை தண்டனை PRpandian| Farmers Protest|

திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் கிராமத்தில் செயல்படும் ONGC எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு எதிராக 2015ல் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மீத்தேன் எடுப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுவதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. அப்போது, அந்த நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் உட்பட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருவாரூர் மகிளா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு அளித்தார். பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். விக்கிரபாண்டியம் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் 3 மாதம் சிறை; 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எஞ்சிய 20 பேரில் 18 பேர் விடுக்கப்பட்டனர். 2 பேர் வழக்கு நடைபெறும்போதே இறந்துவிட்டனர். #PRPandian #ONGC #ONGCCase #Judgement #TiruvarurCourt #FarmersProtest

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை