/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரி விமான சேவை மீண்டும் துவங்கியது! Puducherry - Bangalore |Air Service |Hyderabad
புதுச்சேரி விமான சேவை மீண்டும் துவங்கியது! Puducherry - Bangalore |Air Service |Hyderabad
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஏர்போர்ட் 2013ம் ஆண்டு ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை வழங்கி வந்தது. பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஏர்போர்ட் மூடப்பட்டது. பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் ஏர்போர்ட் செயல்பட துவங்கியது. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுத்தியது. இதனால் கடந்த 8 மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை.
டிச 20, 2024