200 கோடி ஏப்பமிட்ட கேங் லீடர் மிஸ்ஸிங்; உபி கும்பலின் பின்னணி! | Puducherry Police | Cyber Crime
வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டார். தன்னை அந்த நிறுவனத்தின் எக்ஸ்கியூட்டிவாக ஆக அறிமுகப்படுத்தி ஒரு நபர் பேசினார். கனடாவில் 5 ஸ்டார் ஓட்டலில் மேனேஜர் வேலை நிச்சயம். மாதம் 10 லட்சம் சம்பளம். விசா, மெடிக்கல் செக் அப், இன்சூரன்சுக்கு டெபாசிட் செய்தால் உங்க பைல் சீக்கிரம் மூவ் ஆகும் என ஆசை காட்டினார். ரமேஷ் குமாரும் நம்பி பணம் அனுப்ப தொடங்கினார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் ரமேஷ். 17 லட்சம் வரை பறி கொடுத்ததால் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். மார்ச் மாதம் வந்த ஆன்லைன் மோசடி குறித்து தனிப்படை போலீசார் விசாரணையை துவக்கினர். வங்கி பரிவர்த்தனை, மெயில் போன்றவற்றை டிராக் செய்து மோசடி ஆசாமிகள் பதுங்கி இருந்த இடத்தை துப்பு துலக்கினர்.