நீர்நிரம்ப நடவடிக்கை எடுக்குமா அரசு? | Pool | Lake | Pudukottai | TN Govt
நிரந்தர மைதானமாக மாறிய செட்டி ஊரணி குளம்! புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் குளங்கள், கண்மாய்கள் அதிகம் உள்ளன. அவற்றில் 12க்கும் மேற்பட்டவை கடந்த 10 ஆண்டுகளில் நீர்வரத்து இன்றி வறண்டு விட்டன. குறிப்பாக அரிமளத்தில் செட்டி நாட்டு பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்ட செட்டி ஊரணி குளம், பல ஆண்டுகளாக நீரின்றி காணப்படுகிறது. குளத்துக்கு வரும் நீர்வழிப்பாதை ஆக்கிரப்பால் நீர்வரத்து நின்று விட்டது. அதனால் அந்த குளத்தை இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாக மாற்றி விட்டனர். எவ்வளவு மழை பெய்தாலும் குளத்தில் சிறிதளவு மட்டுமே நீர் தேங்குகிறது. அந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு, தடுப்பு அமைத்து இளைஞர்கள் நிரந்தர மைதானமாகவே மாற்றி விட்டனர்.
ஜூன் 28, 2024