/ தினமலர் டிவி
/ பொது
/ ரத யாத்திரையில் பரபரப்பை ஏற்படுத்திய கூட்ட நெரிசல் | Puri jagannath temple | Ratha yatra
ரத யாத்திரையில் பரபரப்பை ஏற்படுத்திய கூட்ட நெரிசல் | Puri jagannath temple | Ratha yatra
ஒடிசாவின் அழகிய கடற்கரை நகரான புரியில் அமைந்துள்ளது பூரி ஜெகன்நாதர் கோயில். மூலவர்களான ஜெகன்நாதர், பலராமன், தேவி சுபத்ராவை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடக்கும் ரத யாத்திரை உலக அளவில் சிறப்பு பெற்றது. நடப்பு ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று தொடங்கியது. மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. ஜெகன்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் இழுத்தனர்.
ஜூன் 28, 2025