கைது ஆக்ஷனில் புடின் தப்பியது எப்படி-பகீர் பின்னணி | Putin Mongolia visit | ICC | Russia vs Ukraine
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச கிரிமினல் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து ஒன்றரை ஆண்டு ஆகிறது. ரஷ்யாவை விட்டு வெளியே சென்றால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படும் அபாயம் நீடிக்கிறது. இருப்பினும் அவர் துணிச்சலுடன் வெளிநாடு பயணம் செய்து, கைது நடவடிக்கையில் இருந்து நைசாக தப்பிய இருப்பது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 2022 பிப்ரவரியில் உக்ரைனில் போரை ஆரம்பித்தது ரஷ்யா. கடுமையான தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்தது. பின்னர் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வரும் ஆயுத உதவி மூலம் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுக்க துவங்கியது. இரண்டரை ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இரு தரப்பிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். ரஷ்யா தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்ததை எதிர்த்து நெதர்லாந்து நாட்டில் செயல்படும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் உக்ரைன் வழக்கு தொடுத்தது. விசாரணை முடிவில் ரஷ்யா போர் குற்றம் புரிந்ததாக கோர்ட் அறிவித்தது.