உண்மையை எழுத்துப்பூர்வமான பதிலாக அளிப்போம்: தேர்தல் கமிஷன் | Rahul | Congress | Maharashtra election
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பரில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. 9.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் சுமார் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ், சரத் பாவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல். டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கும் 2024 பார்லிமென்ட் தேர்தலுக்கும் இடையே 5 ஆண்டு காலத்தில் வெறும் 32 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.