உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடவுளுடன் தொடர்பு பழங்கதை மோடியை கிண்டலடித்த ராகுல் LoP at USA| Rahul at USA| Congress MP Speech a

கடவுளுடன் தொடர்பு பழங்கதை மோடியை கிண்டலடித்த ராகுல் LoP at USA| Rahul at USA| Congress MP Speech a

அமெரிக்கா சென்றுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விர்ஜினியாவில் நடந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். நாட்டின் பன்முகத்தன்மையை பாஜ மதிப்பதில்லை. பல மாநிலங்கள் சேர்ந்து உருவானதே தேசம் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இங்கு சாப்பிட பல வகை உணவுகள் பரிமாறப்படும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அனைத்திற்கும் தனித்துவம் உள்ளது. இந்தியாவில் ஒரே தட்டில் சாதம், பருப்பு, காய்கறி என அனைத்தும் வைக்கப்படுகிறது. பாஜவினர் கூற்றுப்படி சாதம் என்பது பருப்பை விட முக்கியத்துவம் வாய்ந்தது. காய்கறி அனைத்தையும் விட முக்கியத்துவம் குறைந்தது என்கின்றனர். இப்படித்தான் அங்குள்ள மக்கள் நடத்தப்படுகின்றனர். அவரவர்களுக்கான முக்கியத்துவமும், பிரதிநிதித்துவமும் கொடுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறோம். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, பட்டியில் இனம், பழங்குடி இனத்தை சேர்ந்த 90 சதவீதம் பேர் உரிய பிரதிநிதித்துவம் பெறாமல் உள்ளனர். பெரும் தொழில் அதிபர்களில் கணக்கில் இவர்கள் இடம் பெறவில்லை. அரசை வழிநடத்தும் 70 செயலர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே மேற்கண்ட பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். முதலில் மக்களின் சமூக - பொருளாதார நிலையை கண்டறிய வேண்டும். அதற்காக உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் இப்போதைய மத்திய அரசுக்கு கவலை இல்லை. அவர்களுக்கான ஆலோசனை மையம் நாக்பூரில் உள்ளது. அதன் படி மட்டுமே அவர்கள் நடக்கின்றனர். நாட்டு மக்களை எவ்வளவு பயமுறுத்தி வைத்திருந்தனர். பிரதமரின் 56 இஞ்ச் மார்பு, கடவுளுடன் நேரடி தொடர்பு எல்லாம் பழைய கதையாகிவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு பின் எல்லாம் மாறிவிட்டது. இப்போது அதெல்லாம் பழைய வரலாறு ஆகிவிட்டது என ராகுல் கூறினார். .

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !