எந்தெந்த ரயில்கள்? ரயில்வே முக்கிய அறிவிப்பு Rail service cancelled due to Heavy rain at Chennai|
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால், மாநகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரயில்வே தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், அவ்வழியே ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் முக்கிய 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையிலான ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டது.