வந்தே பாரத் ரயிலுக்கு மவுசு அதிகம்: அமைச்சர் தகவல் | Railway Minister | Vande Bharat
பார்லிமென்ட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 எம்பிக்கள் வந்தே பாரத் ரயில்கள் மற்றும் அவற்றின் வசதிகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அவர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். நாடு முழுவதும் 136 வந்தே பாரத் ரயில்கள் சிறந்த பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான கவாச் கருவி, அதிவேகம், சீல் வைக்கப்பட்ட கேங்வே, தானியங்கி கதவுகள், கேஸ் வசதியுடன் கூடிய மினி பேன்ட்ரி போன்ற வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்களின் வேகத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த அக்டோபர் வரை இந்த ரயில்கள் நூறு சதவீதத்துக்கும் அதிகமான பயணிகளை பதிவு செய்துள்ளது. இது பயணிகளின் மத்தியில், வந்தே பாரத்துக்கு உள்ள பிரபலத்தை காட்டுகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.