திருந்தாத 2 கேட் கீப்பர்கள்: வேலையை விட்டு தூக்கிய ரயில்வே 2 gate keeper suspended southern railway
கடலூர் விபத்து நடந்த 2 நாளில் ஷாக் 2 கிராசிங்கில் தூங்கிய கேட் கீப்பர்கள் ஆய்வுக்கு போன அதிகாரிகள் அதிர்ச்சி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8 ம்தேதி காலை 7 மணியளவில் ரயில்வே கிராசிங்கை கடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில், ஒரு மாணவி, 2 மாணவர்கள் இறந்தனர். டிரைவர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். வேன் கிராசிங்கை நெருங்கியபோது கேட் திறந்தே கிடந்ததாக காயமடைந்த டிரைவர் கூறினார். கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் தூங்கி கொண்டிருந்ததாக அபு்பகு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. பள்ளி வேன் டிரைவரும் மக்களும் வற்புறுத்தி கேட்டதால், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்துள்ளார்; அதனால் விபத்து நடந்துள்ளது என தெற்கு ரயில்வே கூறுகிறது. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கைதும் செய்யப்பட்டிருக்கிறார். கடலூர் ரயில் விபத்துக்கு பிறகு, எப்போதோ ஒருமுறை ரயில்கள் வரும் கிராசிங்குகளில் கேட் கீப்பர்கள் தூங்குவதாக பொதுமக்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்தன.