/ தினமலர் டிவி
/ பொது
/ சில மணி நேர மழைக்கே ஆட்டம் கண்ட ஏரியாக்கள் | Rain | Heavy Rain | Weather News
சில மணி நேர மழைக்கே ஆட்டம் கண்ட ஏரியாக்கள் | Rain | Heavy Rain | Weather News
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கன மழை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி, தஞ்சாவூர் சாலை, இடையப்பட்டி பகுதியில் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வடக்கு நான்காம் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் அவ்வழியாக சென்ற ஆட்டோ சிக்கியது. ஆட்டோவில் பயணித்த கைக்குழந்தை உள்ளிட்ட பெண்களை அப்பகுதி இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.
அக் 13, 2024