உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 நாட்களுக்கு காத்திருக்கிறது கனமழை! வானிலை அப்டேட் | Rain | IMD | Rain News

2 நாட்களுக்கு காத்திருக்கிறது கனமழை! வானிலை அப்டேட் | Rain | IMD | Rain News

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் சென்னை வானிலை மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்றும், நாளையும் தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. 18ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 7 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 19 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 10 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதே போல 20,21 தேதிகளிலும் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. 16 முதல் 19ம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை