23 ஊரில் அடித்து ஊற்றும் கனமழை-முக்கிய அப்டேட் chennai rain | tn weather today imd heavy rain alert
தமிழகத்தில் இன்று வரை கனமழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இப்போது 9ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழகம் மேல் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பரவலாக கன மழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். திங்கட்கிழமை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியிலும், செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்க்கும். புதன்கிழமையை பொறுத்தவரை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.