/ தினமலர் டிவி
/ பொது
/ அச்சத்தில் பெண்கள்: கவலையில் வியாபாரிகள் rajaji market kanchipuram cm stalin inaugurate tasmac liqu
அச்சத்தில் பெண்கள்: கவலையில் வியாபாரிகள் rajaji market kanchipuram cm stalin inaugurate tasmac liqu
காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ராஜாஜி மார்க்கெட் உள்ளது. ரூ7 கோடி செலவில் மார்க்கெட் புதுப்பித்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் 12ம்தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வழியாக மார்க்கெட்டை திறந்து வைக்கிறார். மார்க்கெட் திறக்கப்பட்டதும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், மார்க்கெட் நுழைவாயிலில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு, பார் இல்லாத காரணத்தால் ரோடுதான் திறந்தவெளி பாராக விளங்குகிறது. கடையை திறந்ததும் குடியும் கும்மாளமுமாய் மதுப்பிரியர்கள் கூடி விடுவார்கள்.
ஆக 10, 2024