உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைவர்களுக்கும் நன்றி சொன்னார் ரஜினி | Rajinikanth | Prime Minister Modi | CM Stalin

தலைவர்களுக்கும் நன்றி சொன்னார் ரஜினி | Rajinikanth | Prime Minister Modi | CM Stalin

ரசிகர்கள் பிரார்த்தனை ரஜினிகாந்த் நன்றி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வரும் 10 ம்தேதி திரைக்கு வரவுள்ளது. ரஜினி 171 வது படமான கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. சென்னை வந்த அவர் அப்போலோ ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். இதயத்தில் இருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி ரத்த நாளம் வீங்கி இருந்தது. வீக்கத்தை சரிசெய்ய டாக்டர்கள் ஸ்டென்ட் பொருத்தினர். அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்ற ரஜினி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ