உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொங்கல் பரிசு தொகுப்பில் ₹1000 ரொக்கம் எங்கே? |Ramadoss|PMK |Pongal gift |TN Govt | ₹1000 Cash

பொங்கல் பரிசு தொகுப்பில் ₹1000 ரொக்கம் எங்கே? |Ramadoss|PMK |Pongal gift |TN Govt | ₹1000 Cash

2025- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்துள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கி வந்த 1000 ரூபாய் ரொக்கம் இந்த முறை காணாமல் போயிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஏற்கனவே வழங்கி வந்த ரொக்க பணத்தை திமுக ஆட்சிக்கு வந்த பின் நிறுத்திவிட்டு வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்து இருந்ததாகவும், அதன் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் 2023, 2024 ஆண்டுகளில் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை