உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 21ம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்த மீனவர்கள்! Fisherman protest | Rameswaram | Tamilnadu

21ம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்த மீனவர்கள்! Fisherman protest | Rameswaram | Tamilnadu

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 32 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இதனை கண்டித்து தங்கச்சி மடம் பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த 5 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், அதனை தொடர்ந்து காத்திப்பு போராட்டம், பின்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டம் தொடர்ச்சியாக நடந்தது. கவர்னர் ரவி, மீன்வள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்படவில்லை. ஐந்தாவது நாள் போராட்டம் இன்று நடந்தது. 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை