உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொழும்பு மருத்துவமனையில் ரணில் விக்ரமசிங்க அட்மிட் | Ranil wickremesinghe | Srilanka | Admit

கொழும்பு மருத்துவமனையில் ரணில் விக்ரமசிங்க அட்மிட் | Ranil wickremesinghe | Srilanka | Admit

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று கைது செய்யப்பட்டார். பதவிக்காலத்தில், சொந்த தேவைக்காக அரசு கஜானா பணத்தை செலவு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் வழங்க மறுத்த கொழும்பு கோர்ட், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். ஐசியு பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரணில் விக்ரமசிங்க, இலங்கை அதிபராக இருந்தபோது, 2023ல் அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதற்காக ரணில், அவரது மனைவி உட்பட 10 பேர் லண்டன் சென்றனர். சொந்த காரணத்துக்கு சென்றாலும், அந்த செலவுக்கு அரசு பணத்தை செலவழித்ததாக தெரிகிறது. அதனால், ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundar R
ஆக 23, 2025 22:52

வைத்திய ஆலோசனையா? அல்லது வைத்தியசாலைக்குள் ஐசியூ-க்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாரா? இலங்கை பிரச்சினை தீர்ந்து அந்நாட்டு மக்கள் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி