ரத்தன் டாடா திடீர் அட்மிட்! என்ன காரணம்? | Ratan Tata | Ratan Tata Admit | Mumbai
வதந்திகளை பரப்ப வேண்டாம் ரத்தன் டாடா கோரிக்கை பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு வயது 86. நேற்று நள்ளிரவில் திடீரென ரத்தன் டாடாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஐசியு பிரிவில் சிகிச்சையில் உள்ளார். அவருடைய ரத்த அழுத்தம் குறைந்ததால் அட்மிட் ஆனதாகவும் கூறப்பட்டது. ரத்தன் டாடா உடல் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் பரவிய நிலையில் இது தொடர்பாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். பரவிய தகவல் எதுவும் உண்மை இல்லை. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. வயது மூப்பு மற்றும் வழக்கமான பரிசோதனைக்காகவே அட்மிட் ஆகி உள்ளேன்.