உச்சகட்ட உஷார்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் | RAW | NIA | India
பாகிஸ்தானை சேர்ந்தவன் பயங்கரவாதி பர்ஹத்துல்லா கோரி. அபு சுபியான், சர்தார் சாஹாப் மற்றும் பரு என இன்னும் பல பெயர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளான். 2002ல் குஜராத் அக்சர்தாம் கோயிலில் 30 பேர் இறப்புக்கு காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் 2005ல் ஹைதராபாத்தில் போலீஸ் சிறப்பு படை அலுவலகம் முன்பு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இவனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆன்லைன் மூலமும் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வந்துள்ளான். சமீபத்தில் 3 பேரை டில்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இது அம்பலமானது.
ஆக 28, 2024