செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படைக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு! Red Sandalwood Smuggling
₹4.2 கோடி மதிப்பிலான 6 டன் செம்மரம் சிக்கியது! கடத்தல்காரர்களை விரட்டி பிடித்த அதிரடிப்படை! திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன் பேரில் அன்னமயா மாவட்டம் வீரபள்ளி மண்டலத்தில் கோமிடோனி செருவு பகுதியில் வனத்துறையினருடன் ரோந்து சென்றனர். அங்கு காரில் சிலர் செம்மரங்களை ஏற்றி கொண்டிருந்தனர். அதிரடி படையினரை பார்த்த கடத்தல்காரர்கள் தலைதெறிக்க ஓட துவங்கினர். அவர்களை விரட்டிய அதிரடி படையினர் 8 பேரை மடக்கினர். பலர் தப்பியோடினர். ஒரு கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் 10 செம்மர கட்டைகள் இருந்தன. கைது செய்யப்பட்ட 8 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் பெரிய அளவில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட்டா தாலுகா கடிஹனஹள்ளியில் அதிரடி படையினர் சோதனை நடத்தினர். அங்கு தைல மர தோப்பில் 6 டன் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 4.2 கோடி ரூபாய் மதிப்பிலான 185 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.