: கீழமை கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு | RG kar case verdict | West bengal go
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ல், 31 வயது பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். நாட்டையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்தில் கொல்கத்தா போலீசில் தன்னார்வலராக வேலை பார்த்த சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சஞ்சய் ராய் மீது கொல்கத்தா சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிர்பன் தாஸ், சஞ்சய் ராய் குற்றவாளி என்று 3 நாள் முன்பு தீர்ப்பளித்தார். திங்களன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்பதால் சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தி இருந்தது.