உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 60 பேர் அவுட்... உலகை அதிரவைத்த பிரேசில் brazil drug gang | narcoterrorism | rio raid on drug gang

60 பேர் அவுட்... உலகை அதிரவைத்த பிரேசில் brazil drug gang | narcoterrorism | rio raid on drug gang

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் அட்டூழியம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்த கும்பலை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பிரேசில் அரசாங்கம் முடிவு செய்தது. போதை கடத்தல் கும்பலின் நடவடிக்கைகளை பல மாதங்களாக போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பின்னர் அவர்களை சுட்டுப்பொசுக்கும் பெரிய ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி ஒரே நாளில் ரியோ டி ஜெனிரோவில் 2500 போலீசார் துப்பாக்கியுடன் ஆபரேஷனில் இறங்கினர். ஒரே நேரத்தில் நகர் முழுதும் தீவிர சோதனை நடந்தது. போதை கும்பலை போலீசார் விரட்டி விரட்டி சுட்டனர். ஒரே நாளில் 64 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் சில போலீசாரும் அடக்கம். கொல்லப்பட்டவர்கள் தவிர 81 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 42 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இன்னும் வேட்டை முடியவில்லை. போலீசாருக்கும் போதை கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடக்கிறது. போலீசாருக்கு எதிராக போதை கும்பல் ட்ரோன் அட்டாக் நடத்தி வருகின்றன. ரகசிய இடத்தில் பதுங்கி இருந்து கொண்டு, ட்ரோன் மூலம் குண்டு வீசுகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் நோக்கில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் போலீசார் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை