/ தினமலர் டிவி
/ பொது
/ ஊராட்சிக்கு எதிராக பொங்கும் கிராம மக்கள் | Road damage | Mayiladuthurai | Memathur
ஊராட்சிக்கு எதிராக பொங்கும் கிராம மக்கள் | Road damage | Mayiladuthurai | Memathur
வரலாற்றில் முதல்முறை தார்ச்சாலையில் புல் முளைத்த அதிசயம் தரமற்ற முறையில் தார்ச்சாலை போட்டு விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை பல இடங்களிலும் மக்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், முதல்முறையாக தார்ச்சாலையில் புல் முளைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேறெங்கும் நடக்காத இந்த அதிசயம் மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தில் நடந்திருக்கிறது. சமீபத்தில் பெய்த மழைக்கு புல் முளைக்கும் அளவுக்கு சாலையை மெல்லிசாக போட்டு ஏமாற்றி விட்டார்கள் என அவ்வூர் மக்கள் குமுறுகிறார்கள்.
நவ 06, 2024