காஸ் பைப் பதிக்கும் பணியால் அவதி
சென்னை அடுத்த சேலையூர் காவல் நிலையம் எதிரே, வேளச்சேரி சாலையில் காஸ் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதால், இரவில் தொடங்கி அதிகாலையில் முடிய வேண்டிய பணி பகலிலும் தொடர்கிறது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர்.
நவ 07, 2024