ரோஹித் திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகுகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா மாற்றப்படுவதாக தகவல் பரவியது. அவரது இடத்துக்கு சுப்மன் கில் வரலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இச்சூழலில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
மே 07, 2025