உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா முழுக்க 18: தமிழகத்தில் அமைவது எங்கே? | Rope Car | Parvatmala Pariyojana

இந்தியா முழுக்க 18: தமிழகத்தில் அமைவது எங்கே? | Rope Car | Parvatmala Pariyojana

ஜம்மு - காஷ்மீரில் அமர்நாத் கோயில், கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட 18 இடங்களில் ரோப் கார் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேதார்நாத், ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயில், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோயில் ஆகிய இடங்களில் ஏற்கனவே ரோப்கார் அமைக்கும் பணி நடக்கிறது. பர்வத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரோப்கார் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலையிலும் ரோப் கார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இப்போது கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 4 ஆயிரம் கோடி ரூபாய் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் ஆகிய இரு ரோப் கார் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. திட்டத்தை முழுவதுமாக முடிக்க 6,800 கோடிக்கு மேல் செலவாகும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். 12.9 கிலோமீட்டர் நீளம் கொண்ட சோன்மார்க்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு 4,081 கோடிக்கும் மேல் செலவாகும். இப்போது இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ரோப் வே அமைக்கப்பட்டால், பக்தர்கள் வெறும் 36 நிமிடங்களில் கேதார்நாத் சென்று விட முடியும். 12.4 கி.மீ ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே திட்டத்திற்கு 2,730 கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்சின் நிபுணர்களின் உதவியுடன் முடிக்கப்படும் என அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை