லஞ்ச ஒழிப்பு ரெய்டு: பதறிய அலுவலர்கள் | RTO Office | Salem
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தூக்கணாம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. டிரைவிங் லைசன்ஸ், வாகன தகுதி சான்று உள்ளிட்ட பல தேவைகளுக்காக அலுவலகத்திற்கு வருவோரிடம் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையிட்டனர். பணியில் இருந்தவர்கள் யாரையும் வெளியே விடாமல் கதவுகளை தாழிட்டனர். 7 மணிநேரம் சோதனை நடந்தது. அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டனர். அப்போது, புகைப்பட அரங்கம், கழிவறை ஜன்னல்கள் வழியாக கட்டுகட்டாக பணம் வெளியே வீசப்பட்டு கிடைந்தன.
செப் 25, 2024